vijayantony thimirpidithavan movie updatee
விஜய் ஆண்டனி
'சுக்ரன்'என்ற படம் மூலம் தமிழ் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் விஜய் ஆண்டனி. இவரது பாடல்கள் நம்மை எழுந்து ஆட வைக்கும் அளவுக்கு ஒரு துள்ளல் இருக்கும். தனது இசையமைப்பில் பல புதுமுக பாடகர்களுக்கு அதிகமாக வாய்ப்பு கொடுப்பார்.
வித்தியாசமான தலைப்பு
'நான்' என்ற படத்தின் மூலம் விஜய் ஆண்டனி தமிழ் திரையுலகில் ஹீரோவாக அவதாரம் எடுத்தார். வித்தியசமான கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் நடித்த பிச்சைக்காரன் படம் மாபெரும் வெற்றி பெற்றது. மேலும் இவரது படத்தின் தலைப்புகளிலும் புதுமை காட்டுவார்.
காளி
இந்நிலையில் கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் காளி. அஞ்சலி,சுனைனா,அம்ரிதா, ஷில்பா மஞ்சுநாத் என நான்கு ஹீரோயின்கள் இப்படத்தில் நடித்துள்ளனர். விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா விஜய் ஆண்டனி, இப்படத்தை தயாரிக்க விஜய் ஆண்டனியே இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். சில நாட்களுக்கு முன்புதான் இப்படத்தின் ஷூட்டிங் முடிந்தது.
திமிரு பிடிச்சவன்
இந்நிலையில் தன்னுடைய அடுத்த படத்திற்கான ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. நம்பியார் படத்தை இயக்கிய கணேசா இயக்கும் இப்படத்துக்கு 'திமிரு பிடிச்சவன்'என்று பெயர் வைக்கப்பட்டுள்ளது.
பாத்திமா விஜய்
இந்த படத்தையும் விஜய் ஆண்டனியின் மனைவியான பாத்திமா விஜய் ஆண்டனியே தயாரிக்கிறார். ரிச்சர்ட் .எம். நாதன் ஒளிப்பதிவு செய்ய விஜய் ஆண்டனி இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் 7ம் தேதி துவங்கவிருக்கிறது.
