Vijay Antony song change Censor Board Directive order to replace EMI instead of GST
விஜய் ஆண்டனியின் அண்ணாதுரை படத்தில் வரும் பாடலில் ஜி.எஸ்.டி க்கு பதிலாக ஈ.எம்.ஐ என மாற்ற வேண்டும் என்று தணிக்கை குழு உத்தரவிட்டுள்ளது.
ஜி.ஸ்ரீனிவாசன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, மகிமா, டையானா சாம்பிகா, ஜூவல்மேரி ஆகியோரது நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாதுரை.
சமீபகாலமாக சமூகத்தில் நடக்கும் அவலங்கள் குறித்துதான் படங்கள் உருவாக்கப்பட்டு வருகிறது. அதற்கு உதாரணமாக விஜய் நடிப்பில் வந்த மெர்சல், நயன்தாரா நடிப்பில் வெளியான அறம் போன்றவை.
இந்தப் படத்தைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் அண்ணாதுரையும் சமூக பிரச்சனையை மையப்படுத்தி உருவாகி வருகிறது. இந்தப் படத்திலும் மெர்சலைப் போன்று ஜிஎஸ்டி பற்றிய பாடல் இடம் பெற்றது. "அண்ணாதுரை" என்ற பெயரில் இப்படம் உருவாகி வருவதால், அண்ணா பிறந்த இடமான காஞ்சிபுரத்துக்கே சென்று படத்திற்கான பாடல்களை அருண்பாரதி எழுதியிருக்கிறார்.
படத்தில் வரும் டூயட் பாடலில் ஜிஎஸ்டி என்ற வார்த்தை அருண்பாரதி பயன்படுத்தியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. "ஜிஎஸ்டி போல என்னை நீயும் வச்சி செய்யுறே" என்று அந்தப் பாடலின் வரிகள் ஆரம்பமாகும்.
இந்தப் படத்தை தணிக்கைக்கு திரையிட்ட போது டூயட் பாடலில் இடம் பெற்ற ஜிஎஸ்டி என்ற வார்த்தையை நீக்கச் சொல்லியிருக்கிறார்களாம். இதனைத் தொடர்ந்து ஜிஎஸ்டி என்ற வார்த்தைக்குப் பிறகு ஈ.எம்.ஐ என்று மாற்றி மீண்டும் பாடலை பதிவு செய்துள்ளனர்.
இந்தப் படத்தை ராதிகா சரத்குமார், பாத்திமா மற்றும் விஜய் ஆண்டனி ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
