Vijay Antony Raid for Running the song about GST - Udhayanidhi Stalin teasing ...
நடிகர் விஜய் ஆண்டனி படத்தில் ஜிஎஸ்டி குறித்த பாடல் வரிகள் இடம் பெற்றுள்ளதால் அவரது வீட்டிற்கு ஐடி ரெய்டு வர வாய்ப்புள்ளது என்று உதயநிதி ஸ்டாலின் கிண்டலடித்துள்ளார்.
இசையமைப்பாளரும் நடிகருமான விஜய் ஆண்டனி தற்போது, அண்ணாதுரை மற்றும் காளி போன்ற படங்களில் நடித்துள்ளார்.
அண்ணாதுரை படத்தை சீனிவாசனும், காளி படத்தை கிருத்திகா உதயநிதியும் இயக்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
வரும் 30-ஆம் தேதி வெளிவருகிறது அண்ணாதுரை திரைப்படம.
இந்த நிலையில், அதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. அதில் பங்கேற்ற உதயநிதி ஸ்டாலின், படத்தின் பாடல்கள் குறித்துப் பேசினார்.
அப்போது, "அண்ணாதுரை படத்தில் ஜிஎஸ்டி குறித்த வரிகள் இடம் பெற்று நீக்கப்பட்டதால், அவரது வீட்டிற்கு ஐ.டி ரெய்டு வர வாய்ப்புள்ளது. எனவே, விஜய் ஆண்டனி கவனமுடன் இருக்க வேண்டும்" என்றும் கிண்டலடித்து கூறினார்.
