விஜய், சிம்பு, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஹன்சிகா அடுத்ததாக பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

விஜய், சிம்பு, தனுஷ் என பல முன்னணி ஹீரோக்களுக்கு ஜோடியாக நடித்துள்ள ஹன்சிகா அடுத்ததாக பிரபல இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க உள்ள படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

விஜய் ஆண்டனி நடிக்கும் படங்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருவதால், தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் நடிக்க கமிட் ஆகி வருகிறார். அதே போல் இவர் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற 'பிச்சைக்காரன்' படத்தை இவரே இயக்கி, தயாரித்து நடிக்கவும் உள்ளார். இதுகுறித்த அறிவிப்பு அவரது பிறந்தநாளில் வெளியானது.

இதை தொடர்ந்து, ஒளிப்பதிவாளரும், இயக்குனருமான விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. இந்த படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் துவங்க உள்ள நிலையில் இந்த படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர், நடிகைகள், மற்றும் தொழில்நுட்ப கலைஞர்களின் தேர்வு விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

அதன்படி தற்போது வெளியாகியுள்ள தகவலில், விஜய் ஆண்டனிக்கு ஜோடியாக பிரபல நடிகை ஹன்சிகா கமிட் ஆகியுள்ளாராம். இவர் தனுஷுக்கு ஜோடியாக 'மாப்பிள்ளை' படத்தில் அறிமுகமாகி, பின்னர்.. விஜய்க்கு ஜோடியாக வேலாயுதம், சிம்புவுக்கு ஜோடியாக வாலு உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். நீண்ட இடைவெளிக்கு பின் சிம்பு கெஸ்ட் ரோலில் ஹன்சிகா கதையின் நாயகியாக நடித்துள்ள 'மஹா' படத்தில் நடித்துள்ளார். இந்த படம் விரைவில் ரிலீஸ் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விஜய் மில்டன் படத்தில், ஹன்ஷிகா நடிப்பது குறித்து இதுவரை அதிகார பூர்வ தகவல் வெளியாகாத நிலையில், விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.