vijay antony acting seeman direction

அண்ணாதுரை, காளி என நடிப்பதில் மிகவும் பிஸியாக இருந்து வரும் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி, அடுத்ததாக நாம் தமிழர் கட்சியின் தலைவரும் நடிகருமான சீமான் இயக்கும் புதிய படத்தில் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

சீமான் கடைசியாக மாதவனை வைத்து ‘வாழ்த்துகள்’ என்ற படத்தை இயக்கி இருந்தார். இப்படத்திற்குப் பிறகு தீவிர அரசியலில் ஆர்வம் காட்டி வந்ததால் படங்கள் இயக்கவில்லை, அவ்வப்போது ஒரு சில படங்களில் குணச்சித்திர வேடங்களில் மட்டுமே நடித்து வந்தார். 

தற்போது மீண்டும் படம் இயக்கும் முயற்சியில் இறங்கியுள்ளார் சீமான்இந்த விஜய் ஆண்டனி ஹீரோவாக நடிக்க வைக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.