இயக்குனர் ஆண்ட்ரூ லூயிஸ் இயக்கத்தில், விஜய் ஆண்டனி   மாறுபட்ட வேடத்தில், கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'கொலைகாரன்' . நடிகர் அர்ஜூன், போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். விஜய் ஆண்டனி ஜோடியாக  ஆஷிமா நடித்துள்ளார்.

காதலிக்காக பல கொலைகளை புத்திசாலித்தனமாக செய்யும் நபராக விஜய் ஆண்டனி நடித்துள்ளார். சற்றும் விறுவிறுப்பு குறையாமல்... ஆக்ஷன், காதல், திரில், சஸ்பென்ஸ் கலந்த படமாக 'கொலைகாரன்' உருவாகியுள்ளது என்பது ட்ரைலரில் இருந்தே தெரிகிறது. அதிலும் அவர் பேசும் வசங்கள் அமைதியாக இருந்தாலும், படத்தின் மீது எதிர்ப்பார்ப்பை அதிகரிக்க செய்துள்ளது.

சைமன் கிங் பின்னணி இசை மிரள வைக்கின்றது.  இந்த ட்ரைலர் தற்போது வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.