மம்முட்டி, நயன்தாரா காம்போவில் விஜய் சேதுபதி முக்கிய வேடத்தில் நடிக்கவிருந்த படத்தில் இருந்த கால்ஷீட் குளறுபடிகளைக் கேள்விப்பட்டு விஜய் ஆண்டனி அப்படத்தை லாவகமாகக் கைப்பறறியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் பணியை முற்றிலும் மறந்து முழுநேர நடிகராக மாறியிருக்கும் விஜய் ஆண்டனி தற்போது ‘அக்னிச் சிறகுகள்’,’காக்கி’,’தமிழரசன்’ஆகிய படங்களில் பிசியாக நடித்து வருகிறார். தமிழில் விஜய் ஆண்டனிக்கு ஓரளவுக்கு நல்ல மார்க்கெட் இருந்தாலும் அஜீத்,விஜய்,சூர்யா, விஜய் சேதுபதி ஆகியோருக்கு இருக்கும் அளவில் மலையாளத்தில் மார்க்கெட் இல்லை. அதனால் ஏதாவது ஒரு நேரடி மலையாளப்படத்தில் அறிமுகமாவதற்காக சந்தர்ப்பம் பார்த்துக் காத்திருந்தார்.

இந்நிலையில் பிரபல இயக்குநர் விபின் இயக்கத்தில் மம்முட்டி, நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடிக்கும் படத்தில் விஜய் சேதுபதியின் கால்ஷீட் பிரச்சினையால் படம் தள்ளிக்கொண்டே போவதைக் கேள்விப்பட்ட விஜய் ஆண்டனி தான் விஜய் சேதுபதி கேரக்டரில் நடிக்கத்தயார் என்றும் தன்னால் நவம்பர் முதல் வாரத்திலிருந்து தேதிகள் ஒதுக்க முடியும் என்றும் இயக்குநருக்கும் தயாரிப்பாளருக்கும் தனது உதவியாளர்கள் மூலம் தகவல் அனுப்பினார். எதிர்முனையில் பிரகாசமான பச்சை விளக்கு எரிந்தது. தற்போது விஜய் சேதுபதியின் இடத்தில் விஜய் ஆண்டனி.