Vijay and team upset regards Vijay 61 Shooting Spot Pics Leaked

ஸ்ரீதேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக தயாரிக்கும் தனது 100-வது படமாக உருவாகிவருகிறது. ஏ.ஆர்.ரகுமான் இசையில் விஜய்-அட்லி கூட்டணியில் உருவாகிவரும் ‘விஜய் 61’ படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன் ஆகியோர் நடிக்கின்றனர். சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, சத்யன், வடிவேலு உள்ளிட்டோரும் இப்படத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது வெளிநாடுகளில் நடைபெற்று வருகிறது. 

இந்நிலையில், இப்படத்தின் காட்சிகள் இணையதளங்களில் வெளியாகி படக்குழுவினருக்கு பீதியை கிளப்பியிருக்கிறது. கடந்த சில தினங்களுக்கு முன்பு, விஜய் - காஜல் அகர்வால் ஆடிப் பாடும் பாடல் படமாகும் காட்சி வீடியோவாக வெளிவந்தது.

அதைத் தொடர்ந்து நேற்று விஜய் சம்பந்தப்பட்ட காட்சி இடம்பெறும் புகைப்படம் ஒன்று இணையதளத்தில் வெளியாகியுள்ளது. அந்த புகைப்படத்தில் விஜய் வேஷ்டி அணிந்து ரொம்பவும் பவ்யமாக நின்றுகொண்டிருப்பது போல் உள்ளது. இப்படியாக அடுத்தடுத்து படக்காட்சிகள் வெளியாவது படக்குழுவினரை மிகவும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

தொடர்ந்து விஜய் ரசிகர்கள் பண்ணும் ஆர்வக்கோளாறு படத்துக்கு மிகவும் பாதிப்பு என்று விஜய் மற்றும் அட்லி பட குழுவினர்கள் கடும் அதிருப்தியில் உள்ளனர். 

ஏற்கனவே விஜய் சூலம் வைத்து இருக்கும் புகைப்படத்தால் கோர்ட் வரை போகும் நிலை ஏற்பட்டது. மீண்டும் மீண்டும் ரசிகர்களால் இப்படி நடக்கும் விஷயம் படத்தின் ரகசியம் வெளியில் போய்விடுமோ என்ற அச்சத்தில் உள்ளனர். எனவே, இனிமேல் நடக்கும் படப்பிடிப்புகளுக்கு நிறைய பாதுகாப்பும், கட்டுப்பாட்டையும் படக்குழு வைக்கப் போவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.