இயக்குனர் லோகேஷ் கனராஜ் இயக்கத்தில், தளபதி விஜய் தற்போது 'மாஸ்டர்' படத்தில் நடித்து முடித்துள்ளார். கோடை விடுமுறையை முன்னிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி ரிலீஸ் இப்படம் ஆக உள்ளது.  'மாஸ்டர்' படத்தின் போஸ்ட் புரோடுக்ஷன் பணிகளும் படு வேகமாக நடந்து வருகிறது. 

இது ஒரு புறம் இருக்க, விஜய் மற்றும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் செய்த செயல் தான், தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பேசப்பட்டு வருகிறது. மேலும் இவர்களின் செயலுக்கு பலரும் தங்களுடைய, வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

அப்படி என்ன செய்திருக்கிறார்கள் தெரியுமா? நெய்வேலியில் படப்பிடிப்பு நிறைவு பெற்ற கடைசி நாள், படக்குழுவின் சார்பில் மரக்கன்றுகளை நட்டு வைத்துள்ளனர். குறிப்பாக, லோகேஷ் கனகராஜ் மற்றும் விஜய் ஆகியோர் நட்டு வைத்த மரக்கன்றுகள் அருகே அவர்களின் பெயர் பலகையும் இடம்பெற்றுள்ளது. மரக்கன்றுகள் நடுவதற்கு முக்கிய காரணம் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என கூறப்படுகிறது.

ஏற்கனவே விஜய் நெய்வேலியில் தன்னை பார்க்க வந்த ரசிகர்களுடன் செல்பி எடுத்த புகைப்படம் உலக அளவில் ட்ரெண்ட் ஆன நிலையில், இவர்களின் இந்த செயலுக்கும் ரசிகர்கள் மற்றும் மக்கள் மத்தியில் பாராட்டுகள் குவிந்த வண்ணம் உள்ளது.