vijay and jayamravi acting magic man character
அட்லி இயக்கத்தில் இளைதளபதி விஜய் நடித்து வரும் 61 வது படத்தில் விஜய் மூன்று வித்தியாசமான வேடங்களில் நடித்து வருகிறார். அதில் மேஜிக்மேன் வேடதில் ஒரு கதாபாத்திரம் உள்ளதாக சமீபத்தில் தகவல் வெளியாகியது.
விஜய்யை முதன்முதலாக மேஜிக்மேனாக பார்க்க அவரது ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்தில் இருந்த நிலையில் ஜெயம் ரவியும் தனது அடுத்த படத்தில் மேஜிக்மேனாக நடித்து வருவதாக தகவல்கள் வெளிவந்துள்ளது.
ஜெயம் ரவி நடித்து முடித்துள்ள 'வனமகன்' திரைப்படம் விரைவில் ரிலீஸ் ஆகவுள்ளது. இந்த படத்தை தொடர்ந்து அவர் நடித்து வந்த 'டிக் டிக் டிக்'. திரைப்படத்தின் படப்பிடிப்பு 90% முடிவடைந்துவிட்ட நிலையில் இந்த படத்தில் ஜெயம் ரவி மேஜிக்மேனாக நடித்துள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளது.
ஒரே நேரத்தில் விஜய்யும், ஜெயம் ரவியும் மேஜிக்மேனாக நடித்து வருவது அபூர்வ ஒற்றுமையாக பார்க்கப்படுகிறது.
தமிழின் முதல் விண்வெளி படமான 'டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவி, ஆரோன் அஜிஸ், நிவேதா, ரமேஷ் திலக் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். டி.இமான் இசையமைத்து வரும் இந்த படத்தை நேமிசந்த் ஜெபக் நிறுவனம் தயாரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
