Asianet News TamilAsianet News Tamil

'ஆளப்போகும் மன்னர்கள்' விஜய் - தோனி போஸ்டர் ஒட்டி அதகளத்தை ஆரம்பித்த தளபதி ரசிகர்கள்..!

நேற்றைய தினம் விஜய் - தோனி இருவரும் கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, தளபதி ரசிகர்கள் இவர்கள் இருவரையும் 'ஆளபோகும் மன்னர்கள்' என, போஸ்டர் அடித்து ஒட்டி அதகளம் செய்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதுடன், சில விமர்சனங்களையும் பெற்று வருகிறது.
 

vijay and dhoni poster goes viral in social media
Author
Chennai, First Published Aug 13, 2021, 10:42 AM IST

நேற்றைய தினம் விஜய் - தோனி இருவரும் கோகுலம் ஸ்டுடியோவில் சந்தித்து பேசிய போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வைரலானதை தொடர்ந்து, தளபதி ரசிகர்கள் இவர்கள் இருவரையும் 'ஆளபோகும் மன்னர்கள்' என, போஸ்டர் அடித்து ஒட்டி அதகளம் செய்துள்ளனர். இந்த போஸ்டர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருவதுடன், சில விமர்சனங்களையும் பெற்று வருகிறது.

தளபதி விஜய் நடித்து தற்போது 'பீஸ்ட்' படத்தில் மிகவும் பரபரப்பாக நடித்து வருகிறார். ​இயக்குனர் நெல்சன்  திலீப்குமார் இயக்கத்தில்  விஜய் நடித்து வரும் இந்த படத்தில் முதல் முறையாக பூஜா ஹெக்டே ஜோடியாக நடித்து வருகிறார். அனிருத் இசை அமைக்கும் இந்தப் படத்துக்கு மனோஜ் பரமஹம்சா ஒளிப்பதிவு செய்கிறார். மலையாள படங்களில், நடித்து பிரபலமான  நடிகர் மற்றும் துணை இயக்குனருமான ஷைன் டாம் சாக்கோ, பிரபல இயக்குநர் செல்வராகவன், யோகிபாபு, விடிவி கணேஷ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் pநடித்து வருகின்றனர். 

vijay and dhoni poster goes viral in social media

சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஜார்ஜியாவிலும், இரண்டாம் கட்ட ஷூட்டிங் சென்னையிலும் முடிவடைந்தது. 3வது கட்ட படப்பிடிப்பை ரஷ்யாவில் நடந்த எண்ணிய நேரத்தில் கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்தது. எனவே படக்குழு தற்போது சென்னையில் உள்ள கோகுலம் ஸ்டூடியோவில் படப்பிடிப்பை பல லட்சம் ரூபாயில் பிரத்தேயேக செட் அமைத்து நடத்தி வருகின்றனர். 

vijay and dhoni poster goes viral in social media

தற்போது தளபதி விஜய்யின் பரபரப்பான காட்சிகள் படமாக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த சமயத்தில் தான் கடந்த இரு தினங்களுக்கு முன்பு சென்னை வந்த இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான தல தோனி தான் நடித்து வரும் விளம்பர படம் ஒன்றின் ஷூட்டிங்கில் கலந்து கொள்ள கோகுலம் ஸ்டுடியோவுக்கு வந்துள்ளார். விஜய் நடித்து வரும் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பும் அங்கே தான் நடந்து வருவதால், விஜய் நட்பு ரீதியாக... தல தோனியை சந்தித்து சில நிமிடங்கள் பேசினார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளத்தில் வைரலாக பரவியது.

vijay and dhoni poster goes viral in social media

தளபதி விஜய் குறித்த எந்த தகவல் வெளியானாலும் அதனை வைரலாகும் தளபதி ரசிகர்கள், இதற்கும் போஸ்டர் அடித்து ஒட்டி அட்டகாசம் செய்துள்ளனர். தளபதி அரசியலுக்கு வர மாட்டேன் என கூறிய போதும், அரசியல் சம்மந்தமாகவே போஸ்டர்களை ஒட்டி வரும், மதுரை வடக்கு மாவட்ட மாநகர் இளைஞரணி தளபதி விஜய் ரசிகர்கள் ஒட்டியுள்ள போஸ்டர் தான் இப்போது பேசும் பொருளாக மாறியுள்ளது.

vijay and dhoni poster goes viral in social media

இந்த போஸ்டரில் தல தோனி -  தளபதி விஜய் அருகருகே இருக்கும் புகைப்படங்களை வைத்து, தோனியை "PM" என்றும், விஜய்யை "CM" என்றும், குறிப்பிட்டு "ஆளப்போகும் மன்னர்கள்" என கூறியுள்ளனர். இந்த போஸ்டர் வைரலாக பார்க்கப்பட்டு வரும் நிலையில், நெட்டிசன்கள் சிலர் இந்த போஸ்டரை கிண்டல் செய்து வரும் நிலையில், சிலர் தங்களுடைய விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள்.


 

Follow Us:
Download App:
  • android
  • ios