நடிகராக மட்டுமின்றி பாடகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர், கதை வசனகர்த்தா, என பல அவதாரங்களில் வெற்றிகரமாக ஜொலித்து வருபவர் நடிகர் தனுஷ்.

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் இயக்குனர் சங்கர் 2.ஓ படத்தை தொடர்ந்து நடிக்கவிருக்கும் , ரஞ்சித் இயக்கும் படத்திதை  தனுஷ் தான் தயாரிக்கவிருக்கிறார்.

இந்நிலையில் ரஜினியை அடுத்து தனுஷ் தயாரிப்பில் விஜய்யும் நடிக்கவுள்ளதாக செய்திகள் தற்போது வெளியாகியுள்ளது.

அனேகமாக விஜய் நடிக்கும் 62 வது படத்தை தனுஷ் தயாரிக்கவுள்ளதாகவும், இந்த படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் இயக்க வாய்ப்பு உள்ளதாகவும் கூறப்படுகிறது.

இந்த செய்தி உறுதி செய்யப்பட்டால் இந்த படத்தின் மூலம் முன்னணி நடிகர்களாக இருக்கும்  தனுஷ் மற்றும் விஜய் என இருவரும் இணையும் படமாக இது இருக்கும்.