Asianet News TamilAsianet News Tamil

தமிழ் சினிமாவில் முதல்முறையாக 16 நாயகிகள்... வேற லெவலில் தயாராகும் விஜய் படம்!!

அட்லீ இயக்கத்தில் விஜயின் 63 வது  படத்தின் முதற்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது.

Vijay and Atlee team up for mass entertainer
Author
Chennai, First Published Jan 5, 2019, 10:34 AM IST

‘சர்கார்’ வெற்றியை தொடர்ந்து விஜய் அடுத்ததாக அட்லீ இயக்கத்தில் மூன்றாவது முறையாக நடிக்க இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான் இந்த படத்தின் எதிர்பார்ப்பு மிகவும் ரசிகர்களிடம் அதிகமாக ஆகியுள்ளது காரணம் அட்லீ கூட்டணி அதோடு இதுவரை படத்தை பற்றிய வந்த செய்திகள், இப்படம் குறித்து இதுவரை வெளிவராத அதுவும் ரொம்பவே ஸ்பெஷலான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

Vijay and Atlee team up for mass entertainer

விஜயின் 63 வது படமாக உருவாகும் இப்படத்தின் முதற்கட்ட வேலைகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், படப்பிடிப்பு விரைவில் துவங்க உள்ளது. விஜய்க்கு ஜோடியாக நயன்தாரா நடிக்கிறார். பெண்கள் கால்பந்தாட்டத்தை மையமாக வைத்து படத்தை எடுக்கிறாராம் அட்லி. 

Vijay and Atlee team up for mass entertainer

மேலும், தமிழ் சினிமாவில் முதல் முறையாக 16  மாடல் அழகிகள் இந்த படத்தில் நடிக்க இருக்கிறார்களாம், விஜயிடம் பயிற்சி பெறும் கால்பந்தாட்ட அணியில் விளையாடும் 16 பெண்களும் விளையாட்டு வீரர்களாக இருப்பதோடு, இப்படத்தின் மூலம் தான் சினிமாவிலும் அறிமுகமாகிறார்களாம். அந்த 16 பேருக்கு பயிற்சியாளராக நடிக்கிறார் விஜய், அவரது கதாபாத்திர பெயர் குரு என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் இந்த படத்தின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிவிட்டது.

Follow Us:
Download App:
  • android
  • ios