செல்வராகவன் இயக்கத்தில், சூர்யா நடித்திருக்கும் திரைப்படம் என்.ஜி.கே. “நந்த கோபாலன் குமரன்” எனும் இந்த திரைப்படம் தான் இந்த ஆண்டு சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பி இருக்கும் திரைப்படம். யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கும் இந்த திரைப்படம் இந்த ஆண்டு தீபாவளி ரிலீசுக்கு தான் மும்முரமாக தயாராகி வந்தது. 

ஆனால் படப்பிடிப்பில் ஏற்பட்ட காலதாமதம் காரணமாக இந்த ஆண்டு தீபாவளிக்கு இந்த படம் ரிலீசாகப்போவதில்லை என்று படக்குழு தரப்பில் இருந்து அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.இதனால் சூர்யா ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்திருக்கின்றனர். சமீபத்தில் ஒரு குறும்படவிழா நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சூர்யா தன் ரசிகர்களிடம் இது குறித்து விளக்கமாக பேசி இருக்கிறார். 

அப்போது அவரிடம் ரிலீஸ் ஏன் தள்ளி போகிறது என கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த சூர்யா நீங்க இப்படி கேட்கும் போது இயக்குனர் பாலா அடிக்கடி கூறும் ஒரு விஷயம் தான் நியாபகம் வருது. தீபாவளிக்கோ பொங்கலுக்கோ சரியான நேரத்தில் வந்திட படம் ஒன்னும் பட்டாசோ, பொங்கலோ கிடையாது. ஒரு திரைப்படம் உறுவாகும் போது சில பல காரணங்களால் கால தாமதம் ஏற்படுவது சகஜம் தான். 
இம்முறை சில விஷயங்கள் எங்கள் கை மீறி போய்விட்டது. ஆனால் எங்களுக்கு நம்பிக்கை இருக்கு எப்படி ஆரம்பித்தோமோ அதே போல நல்ல முறையில் இந்த திரைப்படத்தினை முடிப்போம். 

தீபாவளிக்கு படத்தை ரிலீஸ் பண்ணி உங்களை சந்தோஷப் படுத்த முடியாமல் போனதுக்கு மன்னிச்சிடுங்க என சூர்யா அப்போது தெரிவித்திருக்கிறார். என்.ஜி.கே எப்படியும் விரைவில் திரைக்கு வரும் என்று சூர்யாவே கூறி இருப்பது அவர் ரசிகர்களை சந்தோஷப்பட வைத்திருக்கிறது. ஆனால் இந்த பேட்டியில் அவர் “ பொங்கலுக்கும் தீபாவளிக்கும் வர படம் என்ன பொங்கலா? பட்டாசா? என கேள்வி எழுப்பி இருப்பது விஜய் மற்றும் அஜீத் ரசிகர்களை கடுப்பாக்கி இருக்கிறது. இதில் விஜய்-ன் சர்கார் படம் தீபாவளிக்கும், அஜீத்தின் விசுவாசம் படம் பொங்கலுக்கும் திரைக்கு வர இருக்கிறது என்பது தான் இந்த கோபத்திற்கு காரணம் என்று கூறப்படுகிறது.