தண்ணி பஞ்சம் தீர்ந்தாலும் தீரும், தல-தளபதி ரசிகர்கள் இடையேயான சண்டை ஒருபோதும் ஓயாது போல. எப்பவுமே இருதரப்பு ரசிகர்களுக்கு இடையே ஒருவித மோதல் தொடர்கதையாக இருக்கிறது. விஜய் படம் ஹிட்டா, அஜித் படம் ஹிட்டா, யார் படம் அதிகம் வசூல் செய்திருக்கு போன்ற விஷயங்களை வைத்து தான் சண்டை ஆரம்பிக்கும். 

இந்த வருடம் பொங்கல் பரிசாக வெளியான அஜித்தின் "விஸ்வாசம்" திரைப்படத்தின் வசூலை, தீபாவளி ட்ரீட்டாக ரிலீஸ் ஆன "பிகில்" திரைப்படம் ஓவர் டேக் செய்துவிட்டதாக தகவல் வெளியானது. இது ஒண்ணு போதாதா?, இரண்டு குரூப்பும் அடித்துக் கொள்ள. உண்மையான வசூலை சொல்லுங்க என "பிகில்" பட தயாரிப்பாளரை விஜய் ரசிகர்களும், "விஸ்வாசம்" பட தயாரிப்பாளரை அஜித் ரசிகர்களும் மிரட்டாத கொடுமையாக கேள்வி கேட்க ஆரம்பித்தனர். 

தற்போது "விஸ்வாசம்" படத்தின் வசூல் எவ்வளவு என திரைப்பட விமர்சகர் தனஞ்செயன் கேள்வி எழுப்பியிருந்தார். அதற்கு பதிலளித்த விஸ்வாசம் படத்தின் டிஸ்ட்ரிபியூட்டர் கேஜேஆர் ஸ்டுடியோஸ், "நாங்க ஜனவரி வரைக்கும் விஸ்வாசம் வெற்றியை கொண்டாட இருக்கோம். உங்களுக்கு வேணும்னா நீங்களும் வாங்க, சேர்ந்து கொண்டாடலாம். எங்க ஆபீஸ் கதவு எப்பவும் திறந்திருக்கும்" என பதிவிட்டனர். 

இதை வைத்து இப்போது தல, தளபதி ரசிகர்கள் இடையே டுவிட்டரில் வார் நடைபெற்று வருகிறது. கேஜேஆர் ஸ்டுடியோஸ் பதிலை கிண்டலடிக்கும் விதமாக "வாடா-வாடா-ஆப்பிஸ்க்கு-வாடா" என்ற ஹேஷ்டேக்கை விஜய் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக "வரசொல்ல-ஆப்பிஸ்-இல்லையே" என்ற ஹேஷ்டேக்கை அஜித் ரசிகர்கள் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.