இளையதளபதி விஜய் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான படம் 'கத்தி'.

ஏசியாநெட் தமிழ்-ஐ உங்கள் முதன்மைத் தேர்வாக்குங்கள்googlePreferred

இந்த படத்திற்கு உலகம் முழுவதும் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. இப்போதுகூட இந்த படம் ஒளிபரப்பப்பட்டால் மிகப்பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.

இந்நிலையில் விஜய், முருகதாஸ், லைகா கூட்டணி மீண்டும் இணைந்து 'கத்தி' போன்ற இன்னொரு திரைப்படத்தை எடுக்க வேண்டும் என விஜய் ரசிகர்கள் சமீபகாலமாகவே தங்களுடைய கருத்தை கூறி வந்தனர்.

இந்நிலையில் அவர்களின் ஆசையை நிறைவேற்ற தற்போது விஜய் முடிவெடுத்துள்ளாராம் அதனால் தற்போது அவர் நடித்து கொண்டிருக்கும் அட்லி படத்தை முடித்த பிறகு .

தன்னுடைய 62 வது படத்தில் லைகா நிறுவனம் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடிப்பதற்கு விருப்பம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெகுவிரைவில் வெளியாகும் என்றும் கோலிவுட்டில் செய்திகள் வெளிவந்து கொண்டிருக்கின்றது. இந்த தகவல் தற்போது வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் செம குஷியில் உள்ளனர்.