vijay adicted in filght similator game

இளைய தளபதி விஜயின் பிறந்த நாள் வருவதற்கு இன்னும் ஒரு சில நாட்கள் மட்டுமே உள்ள நிலையில் விஜய் ரசிகர்கள், இவரது பிறந்த நாளை கொண்டாட தயாராகி வருகிறார்கள்.

அதே போல் இவருடைய பிறந்த நாள் அன்று வெளியாக உள்ள 'தளபதி 62' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மீதான எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் அதிகமாகவே உள்ளது.

இந்நிலையில் படப்பிடிப்பின் போது, விஜய் தொடர்ந்து செய்யும் செயல் ஒன்று, வைரலாகி வருகிறது.

விஜய் படப்பிடிப்பு இடையே கிடைக்கும் ஓய்வு நேரங்களில், 'பிளைட் சிமிலேட்டார்' என்கிற கேம் தான் விளையாடுவாராம். கிட்டத்தட்ட விஜய் இந்த கேம்முக்கு அடிமை என்றும் கூறப்படுகிறது. 

இந்த தகவல் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியானதால் விஜய் ரசிகர்கள் பலரும் இந்த கேம்மை டவுன்லோடு செய்து விளையாட துவங்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனை பல விஜய் ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர்.