விஜய் தற்போது தெலுங்கு இயக்குனருடன் கை கோர்த்துள்ள தளபதி 66 பட போஸ்டர் வெளியானது. 

'தளபதி 66' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் ஜூன் 21ஆம் தேதி மாலை 6.01 மணிக்கு வெளியிடப்படும் என்று படத்தின் தயாரிப்பாளரான ஸ்ரீ வெங்கடேஷ்வரா கிரியேஷன்ஸ் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்புடன் விஜய் பேக் பேக்குடன் ஸ்டைலான தோற்றத்தில் இருக்கும் மாஸ் போஸ்டருடன் இணைக்கப்பட்டுள்ளது.

'தளபதி 66' படத்தை வம்ஷி பைடிப்பள்ளி இயக்குகிறார், தில் ராஜு தயாரித்துள்ளார், தமன் இசையமைக்கிறார். விஜய், ரஷ்மிகா மந்தனா ஜோடியாக நடிக்க, பிரபு, ஜெயசுதா, சரத்குமார், குஷ்பு, ஸ்ரீகாந்த், ஷாம், சங்கீதா கிரிஷ், சம்யுக்தா, பிரகாஷ் ராஜ், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபு சிறப்பு வேடத்தில் நடிக்கிறார் என்று கூறப்படுகிறது.

படத்திற்கு " வாரிசு" என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.. 'தளபதி 66' படத்தின் முதல் பார்வையை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

Scroll to load tweet…

இதன் படப்பிடிப்பு சென்னை ,ஐதராபாத்தை தொடர்ந்து தற்போது சென்னையில் நடைபெற்று வருகிறது. கடந்த வாரம் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்து சில படங்கள் கசிந்தன. மேலும் அவை மூலம் நடிகரின் தோற்றம் தெரியவந்தது. இதனால் தற்போது படப்பிடிப்பை தயாரிப்பாளர்கள் மாற்றியுள்ளனர்.

முன்னதாக 'தளபதி 66' படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதியில் அமைக்கப்பட்டு இருந்தது. தற்போது படப்பிடிப்பை வேறு ஒரு தனி இடத்திற்கு மாற்றிய தயாரிப்பாளர்கள் தற்போது செட் பணிகள் மேற்கொண்டு வருகின்றனர்.