தமிழகத்தில் 5 ஆவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தில் 5 ஆவது கட்டமாக ஊரடங்கு உத்தரவு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், கடந்த 6 மாதங்களுக்கு மேலாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகள் வரும் அக்டோபர் 15 ஆம் தேதி முதல், 50 சதவீத பார்வையாளர்களுடன் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

தளபதி தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்துள்ள, மாஸ்டர் திரைப்படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், திரையரங்குகள் திறக்கப்பட்டதும் மற்ற நடிகர்களின் படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மாஸ்டர் படத்தை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தன்னுடைய 65 ஆவது படத்தை நடிக்கிறார். இந்த படத்தை மிக பிரமாண்டமாக தயாரிக்கிறது சன் பிச்சர்ஸ் நிறுவனம், என்கிற தகவல் ஏற்கனவே வெளியான நிலையில்.. தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளது.

அதன்படி 'தளபதி 65' படத்தின் ஷூட்டிங் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் முதல் துவங்கும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. விஜய்யின் 'மாஸ்டர்' படம் பொங்கலுக்கு ரிலீஸ் ஆகும் நிலையில், அதே ஆண்டில் தீபாவளிக்கு விஜய்யின் மற்றொரு படம் ரிலீஸ் ஆகி ரசிகர்களுக்கு இரட்டை விருந்தாக உள்ளது.

மேலும் தளபதி 65 படத்தில் விஜய் இரட்டை வேடத்தில் நடிக்க உள்ளதாக சில தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுவரை விஜய் இரட்டை வேடங்களில் நடித்ததை விட இது சற்று வித்தியாசமாக இருக்கும் என்றும், ஒரு விஜய் முரட்டு வில்லனாக நடிக்க உள்ளதாகவும் கூறப்படுகிறது. எனினும் இது குறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.