சுமார் 9 ஆண்டுகளுக்கு பின், மீண்டும் தமிழ் திரையுலகில் தளபதி 65 படம் மூலம் தலை காட்டியுள்ளவர் பூஜா ஹெக்டே. இவர் உச்ச கட்ட சோகத்தில் போட்டுள்ள பதிவு தற்போது, ரசிகர்கள் மத்தியில் வைரலாகி உள்ளது.

'டாக்டர்' படத்தை தொடர்ந்து இயக்குனர் நெல்சன் திலீப் குமார்  இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் ’தளபதி 65’ இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஜார்ஜியாவில் நடைபெற்று வருகிறது. எனவே நடிகர் விஜய், நாயகி பூஜா ஹெக்டே உள்ளிட்ட படக்குழுவினர், 15 நாட்களுக்கும் மேலாக தீவிரமாக படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். அதே நேரத்தில், ஜார்ஜியாவில் அவ்வப்போது மழை பொழிவு ஏற்படுவதால் படப்பிடிப்பு நடத்த படக்குழுவினர் சிரமப்படுவதாகவும் சில தகவல்கள் வெளியானது.

விரைவில் ஜார்ஜியாவில் நடைபெறும் முதல் கட்ட படப்பிடிப்பு முடிவடைந்து, படக்குழுவினர் சென்னை திரும்ப உள்ளதாகவும் கூறப்படுகிறது. அதே நேரத்தில் கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமாக உள்ளதால், படக்குழு சென்னை திரும்பிய பின்னர் சற்று தாமதமாக துவங்கவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் 'தளபதி 65  பட நாயகி ஹெக்டே உச்ச கட்ட சோகத்தில் போட்டுள்ள இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் ஒரு பதிவு போட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது, தன்னுடைய ஆசிரியை ஜெஸிகா என்பவர் திடீரென காலமாகிவிட்டதாகவும், இந்த உலகம் ஒரு மிகப்பெரிய அறிவாளியை இழந்துவிட்டது என்றும், அவருடைய அன்பான முகம் கனிவான குரல் ஆகியவற்றை நான் என்றும் மறக்கமாட்டேன் என்றும் கூறியுள்ளார்.

மேலும் ‘சில ஆசிரியர்கள் சுத்தமான தங்கம் போல் இருப்பார்கள் அவர்களின் இவரும் ஒருவர் என்றும், என்னை நல்வழி படுத்தியதில் அவருக்கு மிகப் பெரிய பங்கு உண்டு அவருடைய குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று தெரிவித்துள்ளார்.