தளபதி விஜய் அடுத்ததாக இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் 64 ஆவது படத்தில் நடிக்க உள்ளது உறுதியாகி விட்டதால் இந்த படத்தை பற்றி பல தகவல்கள் அவ்வப்போது வெளியாகி வருகிறது.

இந்நிலையில் சமீபத்தில் இந்த படத்தில் நடிகை த்ரிஷா, விஜயுடன்  64 படத்தில் இணைந்து நடிக்க உள்ளதாக கூறப்பட்டது. இதனால் கில்லி, சிவகாசி, ஆதி ஆகிய படங்களை தொடர்ந்து, இந்த படத்திலும் நடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது.

மேலும் கீதா கோவிந்தம் படத்தின் நாயகி ரஷ்மிகாவுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருவதாக ஒரு தகவல் பரவியது.

தற்போது, இது போல் பரவி வரும் வதந்திக்கு முற்று புள்ளி வைக்கும் விதத்தில், தயாரிப்பு நிறுவனம் முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. அதில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் கைதி படத்திலும், விஜய் அட்லீ இயக்கி வரும் 63 ஆவது படத்திலும் பிஸியாக இருப்பதால், இருவரும் தங்களுடைய பணியை முடித்த உடனே, 64 படம் குறித்து உறுதியான தகவலக்கல் வெளியாகும். இதுவரை கதாநாயகி யார் என்று முடிவு செய்யப்பட வில்லை என்றும் கூறியுள்ளனர்.