லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 64’படத்தில் அவருக்கு ஜோடியாக பிரபல மலையாள நடிகையும், கவர்ச்சிப் புயலுமான மாளவிகா மோகனன் ஒப்பந்தமாகவுள்ளதாக நம்பகமான தகவல்கள் தெரிவிக்கின்றன.

‘பிகில்’படத்தை அடுத்து விஜய் நடிக்கவுள்ள ‘தளபதி 64’படத்தின் படப்பிடிப்பு வரும் அக்டோபர் மாதத்தில் தொடங்கவுள்ளது. ‘மாநகரம்’,’கைதி’படங்களை இயக்கியுள்ள லோகேஷ் கனகராஜ் இப்படத்தை இயக்கவுள்ளார். இதன் நாயகியாக முதலிலே அடிபட்ட பெயர் தெலுங்கு நடிகை ராஷ்மிகா மண்டோன்னாவுடையது. அவர் இப்படத்தில் கமி ஆவதற்கு முன்பே நடிகர் கார்த்தியுடன் ‘சுல்தான்’படத்தில் ஒப்பந்தமானதால் அவருக்குப் பதிலாக தற்போது மாளவிகா மோகனன் பெயர் தீவிர பரிசீலனையில் உள்ளதாகப் படக்குழுவினர் தெரிவிக்கின்றனர்.

2013ல் ‘பட்டம் போல’என்கிற மலையாளப்படத்தின் மூலம் அறிமுகமான மாளவிகா அடுத்து இரு மலையாளப்படங்களிலும் ‘பியாண்ட் த கிளவுட்ஸ்’என்ற இந்திப்படத்திலும் நடித்துள்ளார். லேட்டஸ்டாக ‘ஹீரோ’தெலுங்குப்படத்தில் நடித்துள்ளார். தமிழில் இதற்கு முன் ரஜினியின் ‘பேட்ட’படத்தில் சசிக்குமாரின் மனைவியாக ஒரு சிறிய வேடத்தில் மட்டுமே நடித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம், ட்விட்டர் பக்கங்களில் கவர்ச்சி போஸ்களுக்கு பஞ்சம் இல்லாமல் படங்களை பகிர்ந்து வருபவர் மாளவிகா என்பது குறிப்பிட்டே ஆகவேண்டிய சங்கதி.