தளபதி விஜய் நடித்து வரும் 63 படத்திற்கு,  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  குறிப்பாக இந்த படத்தின் பெயர், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்து, ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

அதே போல் இயக்குனர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான 'தெறி', 'மெர்சல்' என இரண்டு படங்களும் ஹிட் ஆகியுள்ளதால், மூன்றாவது படமான 'தளபதி 63 ', அந்த இரண்டு படங்களையும் மிஞ்சும் அளவிற்கு இருக்கும் என பல ரசிகர்கள் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நேற்று நள்ளிரவு அறிவித்தார்.

இதனால் இப்போதே இதனைக் கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர்.  மேலும் தளபதி 63 படத்தின் அப்டேட்டுக்கு, தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்திக்கு  திமுக எம்எல்ஏவும், தயாரிப்பாளருமான ஜெ.அன்பழகன் தன்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் ட்விட்டரில் போட்டுள்ள பதிவில், அனைவரும் இந்த படத்தின் அப்டேட்டுக்காக காத்திருப்பதாகவும், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அல்லது டைட்டில் இன்று 6 மணிக்கு வெளியாகும் என எதிர்பார்ப்பதாகவும்,  அட்வான்ஸ் வாழ்த்துக்கள் என கூறியுள்ளார் ஜெ.அன்பழகன்.