நடிகர் ஜெய் நடித்த 'ஜருகண்டி' படத்தில், கதாநாயகியாக அறிமுகமானவர் நடிகை ரென மோனிகா ஜான். தற்போது அட்லி இயக்கத்தில்,  விஜய் நடித்து வரும் 63 ஆவது படத்தில் ஃபுட்பால் அணியில் ஒருவராக நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் ஃபுட்பால் ஜெர்சி அணிந்துள்ள ஒரு புகைப்படம் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. மேலும் இந்த படத்திற்காக தன்னுடைய அழகை குறைத்து கொண்டு, நடித்துள்ளார் மோனிகா. 

இவரின் இடது கன்னம் மற்றும் கழுத்து பகுதி முழுவதும் ஆசிட் வீச்சு, அல்லது தீவிபத்தால் பாதிக்கப்பட்ட பெண் போல், மேக் அப் தன்னுடைய அழகையே குறைத்து கொண்டு நடித்துள்ளார் மோனிகா. அவர் பக்கத்தில் உள்ள பெண்ணின் முகத்தில் கரும் புள்ளிகள் இடம்பெற்றுள்ளதால், போஸ்ட் ப்ரொடக்ஷன் பணிகளும் ஷூட்டிங் முடிந்த கையோடு நடந்து வருவதாக கூறப்படுகிறது.

மேலும் ஏற்கனவே 'மேயாத மான்' படத்தின் மூலம் பிரபலமான, நடிகை இந்துஜா... சிவப்புநிற ஃபுட்பால் ஜெர்சி அணிந்து வெளியான புகைப்படம் வைரலாக ரசிகர்களால் பார்க்கப்பட்டது. தற்போது சென்னை பூந்தமல்லி அருகே பிரமாண்ட ஃபுட்பால் செட் அமைத்து, அதில் விஜய் 63 ஆவது படத்தின் கிளைமேக்ஸ் காட்சிகள் எடுக்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.