தளபதி விஜய் நடித்து வரும் 63 படத்திற்கு,  ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.  குறிப்பாக இந்த படத்தின் பெயர், மற்றும் ஃபர்ஸ்ட் லுக் குறித்து, ஒவ்வொரு நாளும் வெளியாகும் தகவல்கள் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை மென்மேலும் அதிகரிக்க செய்துள்ளது.

இந்நிலையில் அட்லீ இயக்கியுள்ள இந்த படத்தின் அப்டேட் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என 63 படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய சமூக வலைத்தளத்தில் நேற்று நள்ளிரவு அறிவித்தார்.

கல்பாத்தி அர்ச்சனா கூறியது போலவே, இன்று சரியாக 6 மணிக்கு தளபதி 63 படத்தின் செம்ம அப்டேட் வெளியாகியுள்ளது.

இது குறித்து அவர்பதிவிட்டுள்ள,  தளபதி விஜய்யின் 63 ஆவது படத்தின் ஃபர்ஸ்ட் லுக் 21 ஆம் தேதி வெள்ளிக்கிழமை மாலை  6 மணிக்கு வெளியாகும் என்றும்,  இந்தப் படத்தின் செகண்ட் லுக் 22 ஆம் தேதி சனிக்கிழமை நன்பகல் 12 மணிக்கு வெளியாகும் என கூறியுள்ளார்.

 

ரசிகர்கள் எதிர்பார்த்தது போலவே விஜய்யின் பிறந்த நாளன்று அவருடைய ஃபர்ஸ்ட் லுக் மற்றும் செகண்ட் லுக் பற்றிய தகவலை, தயாரிப்பாளர் அர்ச்சனா கூறியுள்ளது விஜய் ரசிகர்களை இரட்டிப்பு மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.