இயக்குனர் அட்லீ, விஜய் நடித்து வரும் 63 ஆவது படப்பிடிப்பில் மிகவும் பிஸியாக இருக்கிறார். இந்த படத்திற்காக பூந்தமல்லி அருகே பிரமாண்ட கால் பந்து செட் அமைத்து, 70 நாட்கள் தொடர்ந்து படப்பிடிப்பு நடைபெற்றது.

மேலும் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் வெளியே சென்று விட கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருந்தும், ஒரு சில புகைப்படங்கள் வெளியாகி வைரலாக பரவியது.

இந்நிலையில், சென்னை கோகுலம் ஸ்டுடியோவில், நயன்தாரா மற்றும் விஜய் இருவரும் சேர்ந்து நடிக்கும் டூயட் பாடல், இன்றும், நாளையும் படமாக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இந்த படத்தின் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிகர் யோகி பாபு, பரியேறும் பெருமாள் படத்தின் நாயகன் கதிர், மேயாத மான் 'சிந்துஜா' , ரேப  மோனிகா ஜான் உள்ளிட்ட மிகப்பெரிய நட்சத்திர கூட்டமே இப்படத்தில் சங்கமித்து நடித்துள்ளது. 

மிகவும் பரபரப்பாக நடைபெற்று வரும் இப்படத்தின், தலைப்பு குறித்து பல தகவல் வெளியாகி வரும் நிலையில், விரைவில் இப்படப் பெயரை வெளியிட படதரப்பினர் தயாராகி வருவதாகவும் கூறப்படுகிறது.