தளபதி விஜய் 'சர்கார்' படத்தை தொடர்ந்து, மூன்றாவது முறையாக அட்லீ இயக்கத்தில், தளபதி 63 படத்தில் நடிக்க உள்ளார். இந்நிலையில் இந்த படத்தின் பட்ஜெட் குறித்து ஒரு முக்கிய தகவல் சமூக வலைத்தளங்களில் வெளியாகி, வைரலாகி வருகிறது.

கோலிவுட் திரையுலகில், தனக்கென மாஸ் ரசிகர்கள் கூட்டத்தை கொண்டவர் தளபதி விஜய். இவருடைய புதிய படங்கள் மற்றும் எந்த தகவல் வெளியானாலும் அதனை கேக் வெட்டி கொண்டாடி மகிழ்வார்கள் இவருடைய ரசிகர்கள்.

இந்நிலையில் இவர் 'மெர்சல்' படத்திற்கு பின் மீண்டும் அட்லீ இயக்கத்தில் நடிக்க உள்ளது அனைவரும் அறிந்தது தான். இந்த படத்தை AGS எண்டெர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்க,  ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க உள்ளார்.

மேலும் நயன்தாரா நாயகியாக நடிக்க யோகி பாபு, விவேக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடிக்க உள்ளனர்.

இந்த படத்தின் படப்பிடிப்பு ஜனவரி மாதம் தொடங்கி,  தீபாவளிக்கு ரிலீஸ் செய்யப்படும் என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்நிலையில்   இப்படத்தின் பட்ஜெட் குறித்த தகவல் ஒன்று இணையத்தில் கசிய தளபதி ரசிகர்கள் இதனை ஷேர் செய்து வருகின்றனர்.

இந்த திரைப்படம் ஸ்போட்ஸை மையாப்படுத்தி எடுக்க உள்ளதால், 100 கோடி பட்ஜெட்டை  தாண்டும் என அந்த செய்தி குறிப்பில் கூறப்பட்டுள்ளது. ஆனால் படக்குழுவினர் இதுகுறித்து எந்த ஒரு அதிகார பூர்வ தகவலையும் வெளியிட வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.