தெறி, மெர்சல் படத்தின் பிரமாண்ட வெற்றிக்குப்பின் மூன்றாவதுமுறையாக மீண்டும் கைகோர்த்துள்ளது. படப்பிடிப்பு தொடங்கியதிலிருந்து பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் விறுவிறுப்பாக நடந்துவருகிறது.

விளையாட்டை மையப்படுத்தி உருவாகும் இந்த படத்தில் விஜய் மைக்கேல் என்ற கதாபாத்திரத்தில் கால்பந்தாட்ட பயிற்சியாளராக நடிக்கிறார். விஜய் ஜோடியாக நயன்தாராவும், முக்கிய கதாபாத்திரங்களில் கதிர், இந்துஜா, ரெபா மானிகா, வர்ஷா பொல்லாமா, விவேக், யோகிபாபு, டேனியல் பாலாஜி, ஆனந்தராஜ், தேவதர்ஷினி, ஜாக்கி ஷெராப், பேராசிரியர் ஞானசம்பந்தம் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.

படத்தின் போஸ்டர்கள் திருட்டுத்தனமாக லீக் ஆவதால், மீதான எதிர்பார்ப்பு எகிறவைத்துள்ளதால் படத்தின் தலைப்பு மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் எப்போது வெளியாகும் என்று ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது.

இந் நிலையில் படத்துக்கான பெயரை படக்குழுவினர் தேர்வு செய்துவிட்டதாகவும், விஜய் பிறந்தநாளையொட்டி ஜூன் 21-ந் தேதி படத்தின் தலைப்பு, பர்ஸ்ட் போஸ்டர் வெளியாக இருக்கிறது. அட்லி - விஜய் கூட்டணியில் உருவான தெறி, மெர்சல் படம் தீபாவளிக்கு ரிலீஸ் ஆனது. அதேபோல சர்கார் படங்களின் தலைப்புகளும் இதே தேதியில் தான் வெளியானது என்பது குறிப்பிடத்தக்கது. அந்த வகையில், தளபதி 63 படத்திற்கு வெறி, வெறித்தனம், மைக்கேல், கேப்டன் மைக்கேல் உள்ளிட்ட தலைப்புக்கள் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது.