vijay 62 movie sayeesha saigal committed the second heroine
மெர்சல் படத்தின் வெற்றியை தொடர்ந்து நடிகர் விஜய், இயக்குனர் முருகதாஸ் இயக்கத்தில் நடிக்க உள்ள 'விஜய் 62' திரைப்படத்தின், படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளார் என்பது ஏற்கனவே உறுதியாகிவிட்டது.

இந்நிலையில் தற்போது இந்த படத்தில், இன்னொரு நடிகையாக 'வனமகன்' படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடித்த நடிகை சயீஷா சாய்களை கமிட் செய்வதற்காக பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

வனமகன் படத்திலேயே நடிப்பு, நடனத்திற்கு பாராட்டை வாங்கிய நடிகை சயீஷா. வணமகன் படத்தை தொடர்ந்து, 'கருப்பு ராஜா வெள்ளை ராஜா', 'ஜிங்கா' உள்ளிட்ட ஒரு சில படங்களில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
