விஜய் தற்போது பைரவா படத்தில் நடித்து பிஸியாக நடித்து வருகிறார். இப்படம் முடிந்த கையோடு அடுத்து தேனாண்டாள் நிறுவனத்திற்காக ஒரு படத்தில் நடிக்கவுள்ளார் என பல செய்திகள் வந்தாலும் அது அதிகார பூர்வமாக அறிவிக்கவில்லை .

இப்படம் குறித்து தேனாண்டாள் நிறுவனம் முதன் முறையாக விஜய்யின் 61வது படம் பற்றி அறிவித்துள்ளனர், இப்படத்தை அட்லீ தான் இயக்குகிறார் என்பது முடிவாகிவிட்டது.

தெறி போலவே இந்த படமும் ரசிகர்களுக்கு மிகவும் பிடிக்கும்படி இருக்கும் என கூறியுள்ளார்கள், வரும் நாட்களில் டெக்னிஷியன் குறித்தும் படத்தின் நாயகி குறித்தும் அறிவிக்கப்படுமாம்.