vijay 61 tilte release date

'தல' அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தில் டீசர் இன்று இரவு 12 மணிக்கு வெளியாகும் என்று, அனைத்து அஜித் ரசிகர்களும் செம குஷியில் உள்ளனர்.

இந்நிலையில் விஜய் தற்போது அட்லீ இயக்கத்தில் நடித்து வரும் 61 வது படத்தின் தலைப்பும் இதே நாளின் வெளியாகும் என ஏற்கனவே ஒரு சில தகவல்கள் வெளியானது.

ஒரே நாளில் விஜய் படத்தின் தலைப்பும், அஜித் படத்தின் டீசரும் வெளியானால் ரசிகர்களுக்குள் ஏதேனும் கருத்துவேறுபாடு ஏற்படும் என விஜய், படக்குழுவினரிடம் கூறியதால், படத்தின் தலைப்பு வெளியிடுவதை வேறு ஒரு நாளைக்கு மாற்றம் செய்வதாக அறிவித்தனர் படக்குழுவினர்.

இந்நிலையில் தற்போது விஜய்யின் 61வது படத்தின் டைட்டில் மே 28ம் தேதி வெளியாக உள்ளது என நம்பத்தகுந்த வட்டாரங்களில் கூறப்படுகிறது.