vijay 61 movie news



இயக்குநர் ஷங்கரிடம் உதவி இயக்குநரக இருந்தவர் அட்லி. இவரது முதல் படமான ‘ராஜா ராணி’யில் நயன்தாராவுக்கு மிகப்பெரிய ரீஎன்ட்ரி கொடுத்தார். 

அதைத் தொடர்ந்து அடுத்த படமே விஜய்யுடன் ‘தெறி’, அதுவும் மாஸ் ஹிட். தற்போது தனது அடுத்த படத்தையும் விஜய்யை வைத்து அவரது குருநாதர் பாணியில் பிரமாண்டமாக இயக்கி வருகிறார். விஜய்யுடன் காஜல் அகர்வால், சமந்தா, நித்யாமேனன், சத்யராஜ், எஸ்.ஜே.சூர்யா, வடிவேலு, சத்யன், கோவை சரளா உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் முடிவடைந்து தற்போது ராஜஸ்தானில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் விரைவில் இந்தப் படத்தின் குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக ஐரோப்பா மற்றும் அமெரிக்க நாடுகளுக்குச் செல்லவுள்ளனர்.

இந்தப் படத்தின் தயாரிப்பு நிறுவனமான ‘ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ்’ தனது சமூகவலைதளத்தில், ‘தளபதி 61' படத்தின் ஃபர்ஸ்ட்லுக் வரும் ஜுன் 22ஆம் தேதி வெளிவரும் என்றும், பாடல்கள் வரும் ஆகஸ்ட் மாதம் வெளியாகும் என்றும் அறிவித்துள்ளது. 

மேலும், இந்தப் படம் வரும் அக்டோபரில் ரிலீஸ் ஆகவுள்ளது எனவும் இந்த அறிவிப்பில் கூறியுள்ளது. இதனால் இந்தத் தீபாவளிக்கு விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்புகள் ஏற்படுத்தும்விதமாக ‘தளபதி 61’ அமைந்துள்ளது.