vijay 61 movie clips leek

இளைய தளபதி விஜய் பைரவா படத்தை தொடர்ந்து, அட்லீ இயக்கத்தில் தற்போது நடித்து வருகிறார். ஏற்கனவே இந்த படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்றது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு ஐரோப்பா நாட்டில் நடைபெற்று வருவதாக படக்குழுவினர் தெரிவித்தனர்.

இந்த திரைப்படத்தில், விஜய்க்கு ஜோடியாக சமந்தா, காஜல் அகர்வால், நித்யா மேனன் போன்றோர் நடித்து வருகின்றனர். மேலும் சத்யராஜ், வடிவேலு, எஸ்.ஜே.சூர்யா, சத்யன் போன்றோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

பல்வேறு பாதுகாப்போடு இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பை அட்லீ நடத்தி வருவதாக கூறப்பட்ட போதிலும் அவரையும் மீறி, ஒரு சில புகைப்படங்கள் மற்றும் வீடியோ காட்சிகள் சில நாட்களாக வெளியாகிக்கொண்டு தான் இருக்கிறது.

இந்த அதிர்ச்சியில் இருந்து அட்லீ மீள்வதற்குள், தற்போது மீண்டும் விஜய் வேஷ்டி கட்டிக்கொண்டு ஒரு பெரிய நிறுவனத்திற்கும் நிற்பது போல ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படம் வெளியாகியுள்ளது. 

இதனால் படப்பிடிப்பில் மேலும் பாதுகாப்பை அதிகரிக்க அட்லீ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.