எக்ஸைட்மெண்டான விக்னேஷ் சிவன்... தல தோனியிடம் டீ ஷிர்டில் வாங்கிய ஆட்டோகிராப்! வைரலாகும் வீடியோ!
LGM படத்தின் ஆடியோ மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழாவிற்கு வருகை தந்த தல தோனியிடம், விக்னேஷ் சிவன் டீ-ஷர்ட்டில் ஆட்டோகிராப் வாங்கிய வீடியோவை வெளியிட்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.
தல தோனியின் மனைவி சாக்ஷி தற்போது ஒரு தயாரிப்பாளராக தமிழ் சினிமாவில் காலடி எடுத்து வைத்துள்ளார். தோனி என்டர்டெயின்மெண்ட் என்கிற நிறுவனத்தை துவங்கியுள்ள இவர், ஹரிஷ் கல்யாணை ஹீரோவாக வைத்து, லவ் சப்ஜெட் கதையை தயாரித்துள்ளார். இந்த படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக இவானாவும், அம்மாவாக நதியாவும் நடித்துள்ளனர். இந்த படத்தை ரமேஷ் தமிழ் மணி என்பவர் இயக்கி, இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
விரைவில் இந்த படம் ரிலீசாக உள்ள நிலையில், இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரைலர் வெளியீட்டு விழா, சென்னையில் மிக பிரமாண்டமாக நடந்தது. இதில் தோனி தன்னுடைய மனைவி சாக்ஷி, மகள் ஜிவாவுடன் கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்த விழாவில் ஏராளமான பிரபலங்களும் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் தல தோனியுடன் எடுத்து கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார் விக்னேஷ் சிவன். தோனியிடம் டீ - ஷர்ட்டில் ஆட்டோகிராப் வாங்கும் வீடியோவை வெளியிட்டு அவர் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, 'என்னுடைய கேப்டன், என்னுடைய ரோல் மாடல், இந்த தூய மனிதனுக்கு அருகில் இருப்பது என்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. நான் மிகவும் நேசிக்கும் ஒரு மனிதன் என்றால் அது தல தோனி தான். அவரை பார்க்கும் ஒவ்வொரு முறையும் என் முகத்தில் எல்லையற்ற மகிழ்ச்சி தோன்றும்.
அவர் தமிழ் திரையுலகில் படம் எடுப்பதை பார்த்து மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். இந்த துறையை அவர் தேர்ந்தெடுத்து தமிழ் திரைப்பட தயாரிப்பு நிறுவனம் தொடங்கியதற்கு எனது வாழ்த்துக்கள். அவர் தயாரிக்கும் படங்கள் அனைத்தும் வெற்றி பெற எங்கள் அன்பையும் ஆதரவையும் கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம் என்று தெரிவித்துள்ளார்.