கடந்த ஆண்டின் டாப் டென் படங்களில் தான் இயக்கிய ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை பெரும்பாலானோர் சேர்க்காததால் எரிச்சடைந்த விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் ஆங்கிலத்தில் இருப்பதிலேயே அசிங்கமான நான்கெழுத்து கெட்டவார்த்தையில் பதிவிட்டுள்ளார்.

F**k all top 10s,top 5s,hits,misses, collections,reviews-opinions of 2018 !🥳🥳
Man did we have fun making #TSK wit @Suriya_offl sir🔥Yes we did! &
This moment in theatres is & will be enough for everyone involved in #TSK

Thank u @anirudhofficial @kegvraja & #AnbaanaFans 🥳💥 https://t.co/vftYUdwRkn

— Vignesh ShivN (@VigneshShivN) December 31, 2018 />

 

‘ஸ்பெஷல் 26’ என்ற இந்திப்படத்தை சூர்யாவை ஹீரோவாக வைத்து விக்னேஷ் சிவன் ரீமேக்கியிருந்த ‘தானா சேர்ந்த கூட்டம்’ 2018 ஜனவரி 12ம் தேதியன்று ரிலீஸானது. இந்தியில் இருந்த ஸ்பெஷல் ஈர்ப்புகள் எதுவும் தமிழில் இல்லாததால் படம் சுமாரான ஓட்டமே கண்டது. இதை ஒட்டித்தான் அடுத்து பெரிய படங்கள் எதுவும் தேடிவராத நிலையில் நயனின் மேனேஜராகவும் மாறினார்.

இந்நிலையில் டிசம்பர் மாதத்தில் வெளியிடப்பட்ட 95 சதவிகித டாப் டென் பட்டியலில் ‘தானா சேர்ந்த கூட்டம்’ சேர்க்கப்படவே இல்லை. இதனால் கடும் காண்டான விக்னேஷ் சிவன் F**k all top 10s,top 5s,hits,misses, collections,reviews-opinions of 2018 !
என்று சூர்யா தவிர்த்த அனைத்து நடிகர்களின் ரசிகர்களையும் மண்ணை வாரித் தூற்றினார்.

தவிர, படம் ஓடும்போது யாரும் செல்போனில் படம் பிடிக்கக்கூடாது என்கிற உத்தரவையும் மீறி ‘தானா சேர்ந்த கூட்டம்’ படத்தை ரசிகர்கள் எப்படி விசிலடித்து ரசித்தார்கள் என்பதைக் காட்டும் 44 வினாடிகள் கொண்ட திருட்டு வீடியோவையும் வெளியிட்டிருக்கிறார்.