நயன்தாராவின் காதலனாக இருக்கிற காரணத்தால் வாழ்க்கையில் எதை வேண்டுமானாலும் அடைந்துவிடலாம் என்ற விக்னேஷ் சிவனின் அபார நம்பிக்கையை மெச்சுவதா அல்லது ‘எல்லாம் கடந்து போகும்’ என்று மனதைத் திடப்படுத்திக்கொள்வதா என்று யோசிக்க வைக்கிற அளவுக்கு ஒரு ட்விட் போட்டிருக்கிறார் அவர்.இரு தினங்களுக்கு முன்பு உலகின் தரமான படங்களுக்கு ஆஸ்கார் விருதுகள் வழங்கப்பட்டது அனைவரும் அறிந்த சமாச்சாரம். அது குறித்து நம்மவர் கமல்ஹாசனே சில வருடங்களாக அமைதி காத்துவரும் நிலையில், ஆஸ்கார் விருதுகள் வழங்கப்படும் ஹாலுக்கு வெளியே வாசலில் நின்றபடி ஒரு புகைப்படத்தை வெளியிட்டிருக்கும் விக்னேஷ் சிவன்...ஒரு நாள் கதவு திறக்கும்...அருகில் இருப்பதே நமது வேலை’ என்று ஆஸ்கார் வாங்கியவர்கள் துணுக்குறும்படி ஒரு பதிவு வெளியிட்டிருக்கிறார்.[Oru Naal — kadhavu thirakkum ... arugil iruppadhey , namadhu velai... 😇😇😇 
Congrats to all the #Oscar2019 winners & nominees !]

தலைவியின் காதலன் என்பதற்காக எந்த அளவுக்குத்தான் பொறுமை காக்க முடியும்? அப்பதிவால் கொந்தளித்துப்போன ரசிகர்கள் கமெண்ட் பிரதேசத்தில் விக்னேஷ் சிவனைத் திகட்டத் திகட்ட திட்டித்தீர்த்திருக்கிறார்கள். 

...படம் எதுவும் எடுக்காம நாள்பூரா நயன்தாரா கூட சுத்திட்டு ஈவ்னிங் ஆனதும் போய் கதவுகிட்ட தேவுடு காத்துட்டு இரு
அவார்டு ....ட்டுவானுங்க...வாய்ப்பு இல்ல ராஜா வாய்ப்பு இல்ல... என்று தொடங்கி வசவுகள் குவிகின்றன.இந்திய ராணுவத்தில் சேர ஆசைப்பட்டு துப்பாக்கியுடன் போஸ்கொடுத்துப் போட்ட ஒரு ட்விட்டுக்காக சில தினங்களுக்கு முன்பு வாங்கிக் கட்டிக்கொண்ட காயம் ஆறுவதற்குள் அடுத்த ஆப்பைத் தேடி வரவழைத்திருக்கிறார் விக்னேஷ் சிவன்.