vignesh sivan said dhoni came in future primeminister

தமிழ் நாட்டில் அரங்கேறி வரும் சில சம்பவங்களை பார்க்கும் போது, நம் நாட்டை சரியான பாதையில் அழைத்து செல்லும் தலைவர்கள் வேண்டும் என பலர் தொடர்ந்து தங்களுடைய கருத்துக்களை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகின்றனர். 

இந்நிலையில் நேற்றதினம், எம்.எஸ்.தோனியின் தலைமையில் விளையாடிய சென்னை அணி மூன்றாவது முறையாக பைனலில் வெற்றி வாகை சூடி கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை பல கிரிக்கெட் ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர்.

தற்போது CSK அணிக்கும், இந்த அணிக்கு தலைமையாக விளங்கிய தோனிக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துள்ள, பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன். தன்னுடைய அணியை வெற்றிப்பாதையில் அழைத்து சென்ற 'தோனி ஒரு நாள் பிரதமராக வேண்டும் என தன்னுடைய ஆசையை தெரிவித்துள்ளார். 

மேலும் "40 வயதிற்கு பிறகு விளையாட்டு துறையில் இருப்பவர்கள் காணாமல் போய்விடுகின்றனர். ஆனால் தோனி இப்படி ஆக கூடாது. அவர் வருங்காலத்தில் நாட்டிற்காக எதாவது செய்யவேண்டும்" என விக்னேஷ் சிவன் கூறியுள்ளார். 

Scroll to load tweet…