'போடா போடி', 'நானும் ரவுடிதான்' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இதை விட இவர் நயன்தாராவின் காதலர் என்றால் கோலிவுட் வட்டாரத்தில் இன்னும் தெளிவாகவே தெரியும்.  

'போடா போடி', 'நானும் ரவுடிதான்' மற்றும் 'தானா சேர்ந்த கூட்டம்' ஆகிய படங்களை இயக்கியவர் விக்னேஷ் சிவன். இதை விட இவர் நயன்தாராவின் காதலர் என்றால் கோலிவுட் வட்டாரத்தில் இன்னும் தெளிவாகவே தெரியும். 

இவர் இயக்கத்தில் கடைசியாக வெளியான 'தானா சேர்ந்த கூட்டம்' நெகடிவ் விமர்சனங்களை தான் பெற்றது. இன்னும் அவர் தன் அடுத்த படத்தை துவங்கவில்லை.

இந்நிலையில் விக்னேஷ் சிவன், பிரபல கிரிக்கெட் வீரர் தோனியை சந்தித்து பேசியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட ஒரு புகைப்படத்தை வெளியிட்டு, ட்விட்டரில் பக்கத்தில் "தன்னுடைய வாழ்நாள் கனவு நிறைவேறிவிட்டது" இது மிகவும் சந்தோஷமான தருணம். நான் மிகவும் திருப்தியாக உணர்ந்த தருணம். இதற்காக கடவுளுக்கு நன்றி என கூறியுள்ளார் விக்னேஷ் சிவன்.

Scroll to load tweet…

"மேலும் ஒரு நாள் இவர் நாட்டை ஆள வேண்டும், அதை பார்க்க காத்திருக்கிறேன்" இவர் கூறியுள்ளது ஏற்கனவே அரங்கேறி வரும் பலதரப்பட்ட அரசியல் விமர்சனங்களுக்கு மத்தியில் புதிதாக ஒரு குண்டை போட்டது போல் உள்ளது..