தனது காதல் கணவன் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் தயாரிப்பில் முதல் படம் நடிக்கும் நடிகை நயன்தாரா அப்பட ‘நெற்றிக்கண்’ டைட்டிலை வாங்குவதற்காக மறைந்த இயக்குநர் கே.பாலசந்தரின் இல்லம் சென்று அவரது மகள் புஷ்பா கந்தசாமியச் சந்தித்தார்.இத்தகவலை விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

பாலசந்தரின் கவிதாலயா நிறுவனத்தயாரிப்பில் 1981ம் ஆண்டு வெளியான படம் ‘நெற்றிக்கண்’.தந்தை,மகன் ஆகிய இருவேடங்களில் ரஜினி நடித்திருந்த இப்படத்தை எஸ்.பி.முத்துராமன் இயக்கியிருந்தார். ‘ராஜா ராணி ஜாக்கி’,’தீராத விளையாட்டுப்பிள்ளை’,’ராமனின் மோகன்’போன்ற சூப்பர் ஹிட் பாடல்களுடன் இளையராஜா இசையமைத்திருந்தார். இந்த ஆண்டு தேசிய விருதுபெற்ற நடிகை கீர்த்தி சுரேஷின் அம்மா மேனகா ஒரு ரஜினிக்கு ஜோடியாக நடித்திருந்தார்.

சூப்பர் டூப்பர் ஹிட் அடித்த அப்பட டைட்டிலைத்தான் விக்னேஷ் சிவனின் முதல் தயாரிப்புக்குப் பயன்படுத்தியிருக்கிறார்கள். ‘அவள்’படத்தை இயக்கிய  மிலிந்த் ராவ் இயக்கும் இப்படக் கதைக்கும் பழைய நெற்றிக்கண்னுக்கும் சம்பந்தமில்லை. சமீபகாலமாக பழைய எம்.ஜி.ஆர்.,சிவாஜி,ரஜினி,கமல் பட டைட்டில்களுக்கு மவுசு கூடியிருக்கிறது. இத்தலைப்புகளை தயாரிப்பாளர் சங்கத்தில் பதிய வரும்போது, அதன் பழைய நிறுவனத்திடம் ஒப்புதல் பெற்ற கடிதம் இருந்தால்தான் ஏற்றுக்கொள்ளப்படும் என்ற நிலையில் சில தினங்களுக்கு பாலசந்தர் இல்லம் சென்று அவரது புஷ்பா கந்தசாமியிடம் விக்னேஷ் சிவனும் நயன் தாராவும் அனுமதி பெற்ற புகைப்படத்தை நேற்று நடந்த பூஜை செய்திகளை ஒட்டி விக்னேஷ் சிவன் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். த்ரில்லர் படமாக உருவாகும் ‘நெற்றிக்கண்’நயனின் 65 வது படமாகும்.