கோலிவுட் திரையுலகின், லேடி சூப்பர் ஸ்டாரான நடிகை நயன்தாராவிற்கு, கொரோன அறிகுறி ஏற்பட்டதாகவும், எனவே விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா, இருவரும் எழும்பூரில் உள்ள அவர்களுடைய வீட்டில் தனிமை படுத்தப்பட்டதாக ஒரு தாவல் வெளியாகி நயன்தாராவின் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்தது.

இதை தொடர்ந்து, நயன்தாராவின் ரசிகர்கள் பலர், நயன்தாராவின் தரப்பை சேர்ந்தவர்கள் இது குறித்த உண்மை நிலையை தெரிவிக்க வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.

இதையடுத்து, தற்போது வெளியாகியுள்ள தகவலில், நயன்தாரா மற்றும் விக்னேஷ் சிவன் இருவருக்கும் கொரோனா அறிகுறி இருப்பதாக வெளியான தகவல் முற்றிலும் உண்மைக்கு புறமான செய்தி என அவருடைய நெருங்கிய வட்டாரத்தை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த தகவல் முற்றிலும் வதந்தி என இயக்குனர் விக்னேஷ் சிவனும் தெரிவித்ததால் நயன்தாரா ரசிகர்களை நிம்மதி பெருமூச்சு விட்டுள்ளனர்.

சமீபத்தில் தான் பிரபல தயாரிப்பாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை தொடர்ந்து அவரை தனிமை படுத்தி சிகிச்சை அளித்து வருகிறார்கள் மருத்துவர்கள்.  இதை தொடர்ந்து பிரபல இயக்குனர் ஒருவருக்கும் கொரோனா அறிகுறி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

நானும் ரவுடிதான் படத்தை தொடர்ந்து, மீண்டும் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் நயன்தாரா நடிப்பில் உருவாகவுள்ள ’காத்துவாக்குல ரெண்டு காதல்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு லாக்டவுன் முடிந்தவுடன் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதே போல் நயன்தாரா நடித்துள்ள மூக்குத்தி அம்மன் படத்திற்கும் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி உள்ளது குறிப்பிடத்தக்கது.