முன்பெல்லாம் ஒவ்வொரு கொண்டாட்ட தினங்களிலும் தனது குடும்பத்துடன் நயன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த விக்னேஷ் சிவன்.. சமீபகாலமாக அந்த பழக்கத்தை கைவிட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவின் காதல் விவகாரம் நாம் அறிந்ததே. பிரபு தேவாவுடனான காதல் ரத்துக்கு பிறகு மனமுடைந்திருந்த நயன்தாராவுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பை கொடுத்தார் இயக்குனர் விக்னேஷ் சிவன். இவர் இயக்கத்தில் வெளியான நானும் ரவுடிதான் படத்தில் நயன் கதாநாயகியாக நடித்திருப்பார். தனது சொந்த வாழ்க்கை தொடர்பான கதையை இயக்கி இருந்தார் விக்னேஷ் சிவன். அதாவது அந்த படத்தில் விஜய் சேதுபதியின் தாயாக வரும் ராதிகா போலீஸ் வேடத்தில் நடித்திருப்பார். உண்மையில் விக்னேஷ் சிவனின் தயார் ஒய்வு பெற்ற காவல் அதிகாரியவர். தனது சொந்த வாழ்க்கையின் அனுபவங்களை கொண்டே விக்னேஷ்...' நானும் ரவுடி தான் படத்தை இயக்கி இருந்தார்.
இந்த படத்தின் மூலம் கிடைத்த அறிமுகம் பின்னாட்களில் விக்கி - நயன் இடையே காதலாக மலர்ந்தது. இதயப்டுத்து தங்களது காதலை சமூக ஊடகங்கள் வாயிலாக தெரிவித்த இருவரும் அவ்வப்போது வெளியி ஜோடியாக உலா வரும் புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர். முன்பெல்லாம் ஒவ்வொரு கொண்டாட்ட தினங்களிலும் தனது குடும்பத்துடன் நயன் இருக்கும் புகைப்படங்களை பகிர்ந்து வந்த விக்னேஷ் சிவன்.. சமீபகாலமாக அந்த பழக்கத்தை கைவிட்டுள்ளார் என்றே தோன்றுகிறது.
மேலும் செய்திகளுக்கு... அடக்கடவுளே..பாக்ஸ் ஆபீஸில் படு அடிவாங்கிய வலிமை...செகண்ட் வீக்கில் இவ்ளோ தானா?..

வலிமை அம்மா பாடலை எழுதியிருந்த விக்கி..அந்த பாடலுக்கான அடித்தளமே தன அம்மா தான் என கூறி அவருடன் இருக்கும் புகைடத்தை பகிர்ந்து நெகிழ்ச்சி ஏறப்டுத்தியிருந்தார். இந்நிலையில் உலக மகளிர் தினமான இன்று வாழ்த்துக்களை பகிர்ந்துள்ள விக்கி...முழுவதும் தனது ஆசை காதலியான நயன்தாராவின் புகைப்படங்களை மட்டுமே பகிர்ந்து..' அது நம்மை உருவாக்குகிறது! அதுவே எங்களை நிறைவு செய்யும்! நம் வாழ்க்கைக்கும், நாம் செய்யும் அனைத்திற்கும் அர்த்தம் தருபவர்! இன்று மட்டும் அல்ல! ஒவ்வொரு நாளும் அவர்களின் நாள்! வார்த்தைகளை விட செயல்கள் சத்தமாக பேசுகின்றன! எனவே இந்த இடத்தை சுற்றியுள்ள ஒவ்வொரு பெண்ணுக்கும் அழகான இடமாக மாற்றுவோம்! தைரியமான, அழகான, வலிமையான மற்றும் அற்புதமான பெண்கள் அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள்! என குறிப்பிட்டுள்ளார்.
