தளபதி விஜய், மற்றும் தோனி சந்திப்பின் புகைப்படத்தை பார்த்த நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் வயிற்றெரிச்சலோடு, போட்டுள்ள பதிவு, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகவும், காமெடியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
தளபதி விஜய், மற்றும் தோனி சந்திப்பின் புகைப்படத்தை பார்த்த நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன் வயிற்றெரிச்சலோடு, போட்டுள்ள பதிவு, தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாகவும், காமெடியாகவே பார்க்கப்பட்டு வருகிறது.
தளபதி விஜய் தற்போது இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் 'பீஸ்ட்' படத்தின் படப்பிடிப்பில் பிஸியாக இருக்கிறார். இந்த படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு, ஜார்ஜியாவில் நடந்த நிலையில், இரண்டாம் கட்ட படப்பிடிப்பு மற்றும் 3ஆம் கட்ட படப்பிடிப்பை படக்குழுவினர் சென்னையில் தான் நடத்தி வருகிறார்கள். இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது கோகுலம் ஸ்டூடியோவில் பரபரப்பாக நடந்து வருகிறது. அனிருத் இசையமைக்கும் இந்த படத்தை மிக பிரமாண்டமாக சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்து வருகிறது.

மேலும் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடிகை பூஜா ஹெக்டே நடித்துவருகிறார். விடிவி கணேஷ், யோகிபாபு, செல்வராகவன், உள்ளிட்ட பல பிரபலங்கள் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். இந்நிலையில் இன்று, இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டன் தோனி விளம்பரம் ஒன்றில் நடிப்பதற்காக சென்னை வந்துள்ளார்.

இந்த விளம்பரப்பட ஷூட்டிங் விஜய்யின் படப்பிடிப்பு நடந்து வரும் கோகுலம் ஸ்டூடியோவில் தான் எடுக்கப்பட்டது. ஏற்கனவே விஜய்யை தோனி சந்தித்துள்ளதாலும், இருவரும் நண்பர்கள் என்பதாலும் தோனி வந்துள்ளதை அறிந்த நடிகர் விஜய் அவரை நேரில் சந்தித்து பேசியுள்ளார்.

மேலும் படக்குழுவினர் அனைவரும் தல தோனியுடன் இணைந்து புகைப்படமும் எடுத்துக் கொண்டனர். இது குறித்த புகைப்படம் இன்று வெளியாகி விஜய் ரசிகர்கள் மத்தியிலும், தல தோனி ரசிகர்கள் மத்தியிலும், வைரலாக பார்க்கப்பட்டது. மேலும் திலீப் குமார் உடன் தோனி மற்றும் விஜய் இருவரும் இணைந்து எடுத்துக்கொண்ட புகைப்படமும் வெளியாகியது. இதைக்கண்டு செம காண்டாகி பதிவு ஒன்றை ட்விட்டரில் போட்டுள்ளார் நயன்தாராவின் காதலர் விக்னேஷ் சிவன்.

இதுகுறித்து அவர் கூறியுள்ளதாவது... "ஒரு வார்த்தை சொல்லி இருக்கலாம்... வயிறு எரியுது டெம்பரேச்சர் 274 டிகிரி செல்சியசுக்கு போய்விட்டது. நெல்சன் திலீப் குமார் இந்த புகைப்படத்தின் ரா ஃபூட்டேஜ் இருந்தால் அனுப்புங்கள், போட்டோஷாப் செய்துகொள்கிறேன். என கூறியுள்ளார். இதை பார்த்து பலரும் மிகவும் காமெடியாக இருக்கிறது என தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
