அஜித்தின் ஏகே62 படத்திலிருந்து நீக்கப்பட்டதன் வலியை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனக்கே உரிய பாணியில் வெளிப்படுத்தியுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காத்துவாக்குல ரெண்டு காதல். இந்தப் படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பு பெற்றது. இந்தப் படத்தை அஜித்தின் ஏகே62 படத்தை இயக்க இருந்தார். லைகா நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்க இருந்தது. இப்படத்தின் ஷூட்டிங் தொடங்க இருந்த நிலையில், விக்னேஷ் சிவனை அப்படத்தில் இருந்து நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக மகிழ் திருமேனியை கமிட் செய்தார் அஜித். விக்னேஷ் சிவன் சொன்ன கதை திருப்தி அளிக்காததால், அவரை ஏகே 62 படத்தில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், வலியும், வேதனையும், அவமானமும் நிறைந்து காணப்பட்ட விக்னேஷ் சிவன் தனது குடும்பத்தோடு நேரத்தை செலவிட்டு வந்தார். கடந்த சில தினங்களுக்கு முன்பு கூட நயன்தாரா - விக்னேஷ் சிவன் இருவரும் தங்களது இரட்டை குழந்தைகளுடன் மும்பை விமான நிலையத்திற்கு வந்திருந்த வீடியோ ஒன்று வெளியாகி வைரலானது. இந்த நிலையில், அஜித்தின் ஏகே62 படத்திலிருந்து நீக்கப்பட்டதன் வலியை இயக்குநர் விக்னேஷ் சிவன் தனக்கே உரிய பாணியில் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளிப்படுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: வாழ்க்கையில் நாம் அனுபவிக்கும் அனைத்து வலிகளிலும் ஒரு நன்மை இருக்கிறது, பாராட்டும், வெற்றியும் நமக்குக் கற்பிப்பதை விட, அவமானம் மற்றும் தோல்வியின் அனுபவம் நிறைய கற்றுக்கொடுக்கிறது. ஒரு போதும் விட்டுக் கொடுக்காதே, எனது Wikki6ஆவது படத்திலிருந்து ஒரு போதும் பின் வாங்கமாட்டேன். இந்த கடினமான காலங்களில் நான் சந்தித்த கடவுளுக்கும் அனைத்து அன்பான மக்களுக்கும் நன்றி.
உங்கள் அரவணைப்பு மற்றும் என் மீதான நம்பிக்கை என்னைக் கண்டறிய உதவியது மட்டுமல்லாமல், இந்த கணிக்க முடியாத, நிச்சயமற்ற சூழலில் உயிர்வாழ எனக்கு நம்பிக்கையையும் அளித்தது. இன்று, நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன், உனது நற்குணத்தின் எதிர்காலத்தை எதிர்நோக்குகிறேன். எனது குடும்பத்தினர், நண்பர்கள், நலம் விரும்பிகள் மற்றும் சில இனிமையான ரசிகர்கள் ஆகியோருக்கு நன்றி.
என் குழந்தைகளுடன் எல்லா தருணங்களையும் சுவாசிக்கவும் உணரவும் எனக்கு சிறிது நேரம் கொடுத்த பிரபஞ்சத்திற்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார். அதுமட்டுமின்றி மகனுக்கு மித்தமிடும் புகைப்படத்தையும் பகிர்ந்துள்ளார். இந்தப் புகைப்படம் தான் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
