Nayanthara Wedding Invitation : விக்னேஷ் சுவன் - நயன்தாரா தம்பதியின் வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
7 வருடங்களுக்கு மேலாக காதலித்து வரும் நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி திருமண பந்தத்தில் இணைய உள்ளது. இவர்கள் இருவரும் நாளை ஜூன் 9-ந் தேதி சென்னையை அடுத்த மகாபலிபுரத்தில் அமைந்துள்ள நட்சத்திர ஹோட்டலில் திருமணம் செய்துகொள்ள உள்ளனர். இருவீட்டாரின் சம்மதத்துடன் நடக்கும் இந்த திருமண நிகழ்வில் திரைப் பிரபலங்கள் சிலரும் கலந்துகொள்ள உள்ளனர்.
இவர்களது திருமணத்துக்காக பலத்த போலீஸ் பாதுகாப்பும் போடப்பட்டு உள்ளதாம். இந்த திருமண நிகழ்வை காட்சிப்படுத்தும் உரிமையை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளம் பெருந்தொகை கொடுத்து வாங்கி உள்ளது. இதனை இயக்கும் பொறுப்பை இயக்குனர் கவுதம் மேனன் ஏற்றுள்ளதாகவும் கூறப்படுகிறது.

திருமணம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை இயக்குனர் விக்னேஷ் சிவன் நேற்று தான் பத்திரிக்கையாளர் சந்திப்பில் அறிவித்தார். மேலும் திருமணம் முடிந்த பின்னர் வருகிற ஜூன் 11-ந் தேதி நயன்தாரா உடன் வந்து பத்திரிக்கையாளர்களை சந்திக்க உள்ளதாகவும் விக்னேஷ் சிவன் கூறி இருந்தார்.
இந்நிலையில், விக்னேஷ் சுவன் - நயன்தாரா தம்பதியின் வீடியோ வடிவிலான திருமண அழைப்பிதழ் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. அதில் மணமக்கள் பெயர், இருவரின் பெற்றோர் பெயர் மற்றும் திருமணம் நடைபெறும் இடம் குறித்த விவரங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் டிரெஸ் கோடும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்... Vignesh shivan : நயன்தாரா உடனான திருமணம் கிறிஸ்தவ முறைப்படியா?... இந்து முறைப்படியா? - விக்னேஷ் சிவன் விளக்கம்
