Vignesh shivan : இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ரொமாண்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. 

நடிகை நயன்தாராவும், இயக்குனர் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகளாக காதலித்து வருகின்றனர். இவர்கள் கூட்டணியில் அண்மையில் வெளியான காத்துவாக்குல ரெண்டு காதல் திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானதால், இருவரும் செம்ம சந்தோஷத்தில் உள்ளனர். படம் வெற்றியடைந்ததை அடுத்து இருவரும் திருப்பதிக்கு ஜோடியாக சென்று ஏழுமலையானுக்கு நன்றி தெரிவித்து வந்தனர்.

இதனிடையே விக்னேஷ் சிவன் - நயன்தாரா ஜோடியின் திருமணம் வருகிற ஜூன் மாதம் நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது. இதற்காக திருப்பதியில் ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருவதாகவும் சொல்லப்படுகிறது. ஆனால் அவர்கள் தரப்பில் இருந்து இதுகுறித்து எந்த வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

இந்நிலையில், இயக்குனர் விக்னேஷ் சிவன், நயன்தாராவுடன் காத்துவாக்குல ரெண்டு காதல் படப்பிடிப்பு தளத்தில் எடுத்த ரொமாண்டிக் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள விக்னேஷ் சிவன், பெரிய மனசு இருந்தா, எல்லாத்துக்கும் சிரிப்பீங்க என அந்த பதிவில் குறிப்பிட்டு காதலை குறிக்கும் ஹார்டின் எமோஜிகளாக போட்டுள்ளார்.

View post on Instagram
 

இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள், சீக்கிரம் கல்யாணம் பண்ணிக்கொள்ளுமாறு விக்னேஷ் சிவனுக்கு அறிவுரை கூறி வருகின்றனர். அடுத்ததாக இயக்குனர் விக்னேஷ் சிவன் அஜித் நடிக்க உள்ள ஏ.கே.62 படத்தை இயக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படத்தை லைகா நிறுவனம் தயாரிக்க அனிருத் இசையமைக்க உள்ளார்.

இதையும் படியுங்கள்...  விஜய்யின் ‘தளபதி 66’ல் குவியும் நட்சத்திரங்கள்.... புதுவரவாக இணைந்த பிக்பாஸ் பிரபலம் - யார்னு தெரியுமா?