vidyuleka raman waiting for prince

தமிழ் சினிமாவில் காமெடி காட்சியில் கலக்கும் நடிகைகள் ஒரு சிலர் தான். அந்த வகையில் இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய 'நீ தானே என் பொன் வசந்தம்' படத்தில் நடிகை சமந்தாவின் தோழியாக காமெடி கலந்த கதாப்பாத்திரத்தில் அறிமுகமான, வாரிசு நடிகை வித்யுலேகா ராமன். 

இவர், தற்போது தமிழ் மட்டும் இன்றி தெலுங்கு உள்ளிட்ட மொழிகளிலும் நடித்து வருகிறார். கடந்த வருடம் தெலுங்கில் இவர் நடித்து வெளியான 'ரன் ராஜா ரன்' படத்திற்காக சிறந்த காமெடி நடிகைக்கான தேசிய விருதையும் பெற்றார். 

இந்நிலையில் சமீபத்தில் இங்கிலாந்து இளவரசர் ஹாரி மற்றும் நடிகை மேகன் மார்கல் திருமணம் நடைபெற்றது என்பது அனைவரும் அறிந்தது தான்.

இளவரசரை திருமணம் செய்துகொண்ட நடிகை மேகன் மார்கல், கடந்த 22 வருடங்களுக்கு முன்பு பிரித்தானியா அரண்மனை முன்பு எடுத்துக்கொண்ட புகைப்படமும் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. 

இவரை போலவே நடிகை வித்யுலேகா ராமனும் அதே இடத்தில் ஒரு புகைப்படத்தை எடுத்து சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார். அதில் "நேற்று முன்தினம் தான் புகைப்படம் எடுத்தேன்.. இன்னும் 22 வருடம் இளவரசருக்காக காத்திருக்க வேண்டியதுதான்" என கூறியுள்ளார்.

மேகன் மார்கல் போல தனக்கும் வருங்காலத்தில் இப்படி ஒரு வாய்ப்பு அமையலாம் என அவர் காமெடியாகவே தெரிவித்துள்ளார். 

Scroll to load tweet…