vidyuleka raman scoking hair cut

இயக்குனர் கெளதம் மேனன் இயக்கிய 'நீ தானே என் பொன்வசந்தம்' படத்தில் சமந்தாவின் தோழியாக அறிமுகமானவர் நடிகை வித்யுலேகா ராமன். இந்த படத்தை தொடர்ந்து, இவர் பருமனாக இருப்பதால் காமெடி கலந்த கதாப்பாத்திரத்தில் நடிக்கும் வாய்புகள் கிடைத்தது.

கிடைத்த வாய்ப்புகளை தவறவிடாமல் தன்னுடைய நடிப்பு திறமையை காட்டி பல படங்களில் நடித்தார். தமிழ் மொழி மட்டும் இன்றி தெலுங்கு மொழி படங்களிலும் நடித்தார். இவர் தெலுங்கில் நடித்த 'ரன் ராஜா ரன்' படத்திற்காக சிறந்த காமெடி நடிகைக்கான விருதையும் பெற்றார்.

இந்நிலையில் வித்யுலேகா ராமன் தற்போது இவர் நடித்து வரும் ஸ்ரீநிவாஸா கல்யாணம் என்ற புதிய படத்திற்காக தன் தலைமுடியை வெட்டியுள்ளார். ஏற்கனவே இவர் குண்டாக இருந்தாலும் நானும் கவர்ச்சியாகத்தான் இருக்கிறேன் என கூறி கவர்ச்சியான உடை அணிந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இவர் தன்னுடைய தலை முடியை வெட்டி தற்போது வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. இவரின் புதிய முடி அலங்காரத்தை பார்த்து பல ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை தெரிவித்து வருகினறனர்.

Scroll to load tweet…