மனித கம்ப்யூட்டர் என்று புகழ் பெற்றவர் சகுந்தலா தேவி. பெங்களூரைச் சேர்ந்த இவர் சிறு வயதிலிருந்தே சுயமாக கணக்கு பாடங்களைக் கற்றார். சிக்கலான கணக்குகளுக்கு சில நொடிகளில் தீர்வு சொன்னார். இவரது திறமை உலகம் முழுவதும் பரவியது கின்னஸ் சாதனை புத்தகத்திலும் இடம் பிடித்தார். 

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

கடந்த 2013 ஆம் ஆண்டு தனது 83 ஆவது வயதில், உடல் நலக்குறைவால் மரணமடைந்தார். தற்போது சகுந்தலா தேவியின் வாழ்க்கை சினிமா படமாக தயாராகிறது. இதில் சகுந்தலாதேவி வேடத்தில் வித்யா பாலன் நடிக்கிறார். 

இந்த படத்தில் இன்னொரு முக்கிய வேடத்தில், நடிக்க 'தங்கள்' இந்தி படம் மூலம் பிரபலமான சரண்யா மல்கோத்ராவிடம் பேசிவருகிறார்கள். வித்யாபாலன் ஏற்கனவே சில்க் ஸ்மிதா வாழ்க்கையை மையமாக வைத்து இந்தியில் தயாரான 'தி டர்ட்டி பிக்சர்ஸ்' படத்தில் நடித்து தேசிய விருதை பெற்றவர். தெலுங்கில் தயாரான என்டி ராமராவ் வாழ்க்கை கதையில் அவரது மனைவி பசவதாரகம் வேடத்தில் நடித்தார்.

மேலும் அஜீத் குமார் ஜோடியாக இந்தி படத்தின் 'ரீமேக்காக' எடுக்கப்படும் பிங்க் படத்தின் மூலம் தமிழுக்கு வந்துள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. இந்த படம் முடிந்ததும் சகுந்தலாதேவி வாழ்க்கை கதையில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.