நடிகை வித்யா பாலன் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது ஏன்? என முதல் முறையாக கூறியுள்ளார். 

நடிகை வித்யா பாலன் இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ள மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை படத்தில் நடிக்க வந்த வாய்ப்பை மறுத்தது ஏன்? என முதல் முறையாக கூறியுள்ளார்.

Add Asianetnews Tamil as a Preferred SourcegooglePreferred

'நேர்கொண்ட பார்வை' படத்தில் அஜித்துக்கு மனைவியாக நடித்துள்ளார் பாலிவுட் நடிகை வித்யா பாலன். சமீபத்தில் தான் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்தது. இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து சமூக வலைத்தளத்தில் கூறி தன்னுடைய நன்றிகளை தயாரிப்பாளர் போனி கபூருக்கு தெரிவித்தார்.

இந்த படத்தை தொடர்ந்து, வித்யா பாலனுக்கு இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க உள்ள, 'தலைவி' படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்ததாகவும் ஆனால் அதில் தன்னால் நடிக்க முடியவில்லை என்றும், அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், விரைவில் பிரபல அரசியல் தலைவர் 'இந்திரா காந்தியின்' வாழ்க்கையை மைப்படுத்து உருவாகும் வெப் சீரிஸில் நடிக்க உள்ளதால் இந்த வாய்ப்பை ஏற்க மறுத்து விட்டதாக கூறியுள்ளார்.

பின்பு தான் இந்த படத்தின் வாய்ப்பு நடிகை கங்கனா ரணாவத்திற்கு சென்றுள்ளது. மேலும் இந்த படத்தில் நடிப்பதற்காக வித்யா பாலனுக்கு ரூ. 24 கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டதாகவும் கூறப்படுகிறது.