vidya balan talk about all directors
. அதுவே அவருக்கு நல்ல நேரமாக அமைய பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகைகளில் ஒருவராக தற்போது வரை இருந்து வருகிறார். அண்மையில் கூட தமிழ் சினிமாவில் வாய்ப்பு கிடைக்காததால்தான் நான் நல்ல நிலையில் இருக்கிறேன் என்று கூறியிருந்தார்.
வித்யா பாலன் அழகாக இல்லை என புறக்கணித்த பலர், அவரை மீண்டும் தங்களுடைய படங்களில் நடிக்க அழைத்த போது அந்த வாய்ப்புகளை மறுத்து விட்டார் வித்யா.

திருமணத்திற்குப் பின்னர், நாயகிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்களையும் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களையும் தேர்வு செய்து நடித்து வரும் இவர் தற்போது இவரிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் ஒரு கண்டிஷன் வைக்கிறாராம்.

அது என்னவென்றால்... திரைப்படங்களில் நடிப்பதற்காக நான் உடல் எடையைக் குறைக்க மாட்டேன், இந்த உடலுடன் நடிக்க நான் தயார். குண்டான வித்யா பாலனை திரையில் காட்ட விரும்புபவர்கள் மட்டுமே என்னிடம் கதை கூற வந்தால் போதும். அதை விட்டுவிட்டு உடலைக் குறைக்க வேண்டும், இப்படி இருக்கவேண்டும் அப்படி இருக்க வேண்டும் என்றெல்லாம் கூற நினைப்பவர்கள் இங்கே வரத் தேவை இல்லை என கறாராகப் பேசி விடுகிறாராம்.
